அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு.... மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் வழங்கினார்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சீர்காழி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் உள்ள 135 மாற்று திறனாளிகளுக்கு வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சரிசி, கள்ள பருப்பு, ஏலக்காய், நெய், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி அடங்கிய தொகுப்பினை அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் தொழிலதிபர் மார்க்கோனி ஏற்பாட்டில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரமாமணி, ராஜேஷ் பொருளாளர் மதிவாணன் முன்னாள் நகர கழக செயலாளர் பக்கிரி மற்றும் ஏராளமான அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments